search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்மார்ட் நெடுஞ்சாலை"

    தலைநகர் டெல்லியை உ.பி மாநிலத்தின் மீரட் நகருடன் இணைக்கும் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலையை இன்று திறந்து வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். #delhimeerutexpressway #smarthighway #PMModi

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை, ரூ.11,000 கோடி செலவில் ஸ்மார்ட் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுவே நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை வழிச் சாலை என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த சாலையின் முதல்கட்ட பாதையை இன்று காலை பொத்தானை அழுத்தி, திறந்து வைத்த பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார். இதனைத் தொடர்ந்து, திறந்த ஜீப்பில் இந்த சாலை வழியே பயணம் செய்தார். 



    இந்த சாலையில் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    சாதி, மதம், பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உள்கட்டமைப்பு வேறுபடுவதில்லை. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டின் உற்பத்தி திறன் முன்னேற்றம் அடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் 2 ஆக இருந்த செல்போன் தயாரிக்கும் கம்பேனிகளின் எண்ணிக்கை தற்போது 120 ஆக அதிகரித்துள்ளது.

    யோகி ஆட்சியின் கீழ், குற்றவாளிகள் தாமாக முன்வந்து போலீசில் சரணடைந்து வருகின்றனர். தலித்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அனைத்தையும் குறை சொல்வார்கள். பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நலனுக்காக எடுக்கப்படும் திட்டங்களையும் குறை குறை கூறுவார்கள். அவர்கள் எப்போதும் முன்னேற்றத்தை தடுப்பார்கள். இங்குள்ள கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, மேலும் விரைவில் அவர்களது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #delhimeerutexpressway #smarthighway #PMModi
    ×